தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் நடிகர் விஜய், ரஜினி, விக்ரம் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் வலம் வரும் நிலையில் தற்போது நானி நடித்துள்ள தசரா படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் நடிகர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்திற்கும் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ், அமிதாபச்சன் மற்றும் தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடிக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்திற்கு தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தில் இசையமைப்பாளர் திடீரென விலகியதால் தற்போது சந்தோஷ் நாராயணனை கமிட் செய்துள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணனுடன் சேர்ந்து பாலிவுட் பெண் இசையமைப்பாளர் ஒருவரும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் ‌