தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், தமன்னா, மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் நடைபெற்று வருகிறது. இங்கு சிவராஜ்குமார் மற்றும் ரஜினி இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் காந்தாரா படத்தில் இடம்பெற்ற பண்ணையார் வீட்டில் தான் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.