சுட்டி குழந்தைகள், இளம் வயது பெண்கள், வாலிபர்கள் டான்ஸ் ஆடுவதை நாம் பார்த்திருப்போம். இந்த நிலையில் மூன்று பாட்டிகள் ஜாலியாக டான்ஸ் ஆடிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற சவதீகா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த பாடலுக்கு மூன்று பாட்டிகள் இணைந்து டான்ஸ் அடியுள்ளனர். அதில் ஒரு பாட்டி அஜித் போலவே கோட் சூட் மாட்டி டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.