பிரபல அமெரிக்க யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த வாகன ஓட்டிகளுக்குத் தலா சுமார் 90,000 டாலர்களை (இந்திய ரூபாயில் சுமார் 75 லட்சம்) வாரி வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சாலையில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மில்லியன்கணக்கான ரூபாய்களைப் பகிர்ந்து அளிக்கிறார்.

மேலும் பணத்தை எதிர்பாராத விதமாகப் பெற்ற மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அதிர்ச்சியுடனும் அவருக்கு நன்றி தெரிவித்தனர். மிஸ்டர் பீஸ்ட் இது போன்ற பிரம்மாண்டமான பண உதவிகளுக்கும் சவால்களுக்கும் உலகளவில் பெயர் பெற்றவர். இம்முறை போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர்களின் சோர்வை நீக்கும் வகையில் அவர் செய்த  இந்த உதவி, இணையத்தில் பெரும் விவாதத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by World Latin Star (@worldlatinstar)

“>

இந்நிலையில் ஒரு சில நொடிகளில் பலருடைய வாழ்க்கையை மாற்றியமைக்கும் இந்தச் செயல், அவரது தாராள மனப்பான்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்து வருகிறது.