
இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த மூலையில் வித்தியாசமான சம்பவங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் அது வீடியோவாக வெளிவந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையில் ஒரு பெண்ணும் அவருடைய மகளும் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது எதிரே வந்த ஒரு பெண் திடீரென அந்த சிறுமியை போகிற போக்கில் கன்னத்தில் அடித்து விட்டு சென்றார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் அந்த பெண்ணிடம் தட்டி கேட்க முயன்ற நிலையில் அந்த பெண் தகராறு செய்வது போல் வந்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ சூப்பர் மேன் போல வந்த ஒருவர் அந்த பெண்ணை எட்டி உதைத்தார். அந்த பெண் மீண்டும் எழுந்து சண்டை போட முயன்ற நிலையில் அவர் அந்த பெண்ணை எழுந்திருக்க விடாதவாறு அடித்து தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஒரு பயனர் சூப்பர் மேன் வருவாருன்னு என்று தெரியாமல் போச்சு என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவுக்கு தற்போது பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Hero pic.twitter.com/SQgF1CrsZv
— Steve Inman (@SteveInmanUIC) March 23, 2025