
பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப்பிரதேசத்தில் இட்டா நகரில் நடைபெற்ற ‘விக்சித் பாரத்- விக்சித் வடகிழக்கு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகின் மிக நீண்ட இருவழி சுரங்கப்பாதையான சோலா சுரங்க பாதையை திறந்து வைத்தார். இந்திய சீனா எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை இருநாட்டுக்குமான எல்லை கட்டுப்பாடு கோட்டிற்கு அருகில் இருக்கும் தேஜ்பூர் மற்றும் தவாங் பகுதியை இணைக்கிறது . உலகின் மிக நீண்ட சுரங்க பாதை என்ற வரலாற்றை மட்டுமின்றி நீண்ட இருவழி சுரங்கப்பாதை என்ற வரலாற்றையும் இந்த சுரங்கப்பாதை உருவாக்கி உள்ளது .
இந்த சுரங்கப்பாதை கிட்டத்தட்ட 13,000 அடி மேலே இருக்கிறது. இந்த சுரங்கபாதை தான் சுமார் 825 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது. சாலை பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ப இந்த சுரங்கப்பாதை காற்றோட்டத்தோடும் சக்தி வாய்ந்த மின் விளக்குகள், தீயணைப்பு வழிமுறைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. பொறியியலின் அற்புதம் என்று கூறப்படும் இந்த சுரங்க பாதை அனைத்து வானிலை சமயங்களிலும் பயன்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.