பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 35 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் 262.80 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் 249.80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 189.83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 11% குறைந்தது. இந்திய மதிப்பில் 262.80 ரூபாய் என்பது 85.48 ரூபாய் ஆகும்.