
‘துரோகம்’, ‘பொய்மை’, ‘செய்நன்றி மறத்தல்’, ‘வன்முறை’ ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது என்று ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகும் என்ற கோயபல்ஸ் வேலையை இபிஎஸ் செய்கிறார்.
தன்னை விசுவாசமற்றவன் என பேட்டியளித்தது முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் உள்ளதாக விமர்சித்துள்ளார். பல துரோகங்களை செய்துவரும் எடப்பாடி பழனிச்சாமி என் விசுவாசத்தை பற்றி பேச தகுதியற்றவர் என கூறியுள்ளார். மேலும் அவர் பதவியில் இருந்து விலகினால் நல்லது என தொண்டர்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.