இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 1500 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், போரை தீவிர்ப்படுத்த போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவுறுத்தியுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.