இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில்,  இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் குழு தாக்குதலை தொடங்கியுள்ளது உலக நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள காசா பகுதி தங்களுடையது என்று  இஸ்ரேலும், அது தங்களுக்கு சொந்தமானது என்று பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடுவதால் இவ்விரு தரப்பினரிடையே மோதல் போக்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

காசாவை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று இரு தரப்பும் முனைப்பு காட்டி வந்த நிலையில்,  இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்,  தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள அல் அக்ஷா மசூதியில் இஸ்ரேலியர்கள் ஐந்து நாட்களுக்கு மேலாக தங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் என்று அதிகாலை எதிர்பாராத விதமாக இஸ்ரேலின் தென்பகுதியான ஜெருசலேமில்  பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலிருந்து இஸ்லாமிய ஆயுதக் குழுவான ஹமாஸ் திடீர் ஏவுகணை தாக்குதல் துவங்கியது. 20 நிமிடங்களில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் குழு தாக்குதலை தொடங்கிய நிலையில்,  அங்கு பதற்றமான சூழல் நிலவு வருகிறது.

ஹமாஸ் குழுவின் இந்த தாக்குதல் காரணமாக பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும்,  சிலர் இறந்திருக்கலாம் என்றும் இஸ்ரேலியா ராணுவ வீரர்கள் 35 பேரை பிடித்து ஹமாஸ் குழு பிடித்துச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலும் பதில் தாக்குதலை பாலஸ்தீனத்திற்கு எதிராக தொடங்கியது.  Operation Iron Swords என்ற பெயரில் காசா பகுதியில்  மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேல் பதில்தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில்,  போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

தொடர்ந்து தங்கள் நாட்டிற்குள் முன்னேறும் ஹமாஸ் குழுவினர்களை தடுத்து நிறுத்த இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.ஹமாஸ் தாக்குதலால் அங்குள்ள முக்கிய நகரமான டெல் அபீவ் நகரத்தின் கட்டடங்கள் பற்றி எரிந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலை அழைத்து ஒழிப்போம் என்று ஹமாஸ் குழுவும்,  போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிவரும் நிலையில் போர் மேலும் தீவிரமடையும் சூழல் நிலவுகிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான ஒரு சூழல் காரணமாக இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.தொடர்ந்து அங்குள்ள ராணுவ தளபதிகள் மற்றும் அமைச்சர்களுடன் போர் தொடர்பாக  பெஞ்சமின் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முக்கிய  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதே போல் இஸ்ரேல் ராணுவத்தின்   செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் இன்றைய இறுதிக்குள் இஸ்ரேலில் உயிருள்ள பயங்கரவாதிகள் இருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.