அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் ஓபிஎஸ் சிறப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு உத்தகைவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேட்பு மனு  தாக்கல் செய்யாத நிலையில் அவை தலைவர் பெயரில் அறிவிப்பு வெளியானது.

இந்த தேர்வுக்கான வெற்றி சான்றிதழ்களை  தேர்தல் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இபிஎஸ் இடம் வழங்கினர். அதிமுக அலுவலகம் சென்று பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர் இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.