ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட் தேர்வு) 2 ஆம் தாளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2% பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி வழியில் இரண்டாம் தாள் ஆசிரியர் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்ட 2.50 லட்சம் பேரில் வெறும் 20 ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் விண்ணப்பித்த 4 லட்சம் பேரில் 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் 98% பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ளனர்