சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் ஓர் வீடியோ, பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான Omegle எனும் வீடியோ அரட்டை செயலியில், துருக்கியைச் சேர்ந்த பெண் ஒருவர், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனிடம் பேசும் தருணத்தில், அவரை முகம் சுளித்து, கேவலமாக அவமதிக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் சில விநாடிகள் மட்டும் தான் இருந்தாலும், அது இன்று இளம் தலைமுறையிடம் பெரும் கலவரத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.
வீடியோவில், சிறுவன் அன்பாக, “நான் நலமாக இருக்கிறேன், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” எனக் கேட்க, அந்தப் பெண் “நான் துருக்கி நாட்டை சேர்ந்தவள்… நீ?” என கேட்க, சிறுவன் “வங்கதேசம்” என்று பதிலளிக்கிறார். அதைக் கேட்டவுடன் அந்தப் பெண் முகம் சுளித்து, “ஏய், இது என்ன?” என அவமானப்படுத்தும் வகையில் கூறுவதை வீடியோவில் காணலாம். இந்த ஒரே சந்திப்பு மூலம் வங்கதேச சிறுவன் மட்டுமல்ல, அந்த நாட்டையும் அவமதித்ததாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 22, 2025
“>
