பொங்கலுக்கு பின்னும் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும்  ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பரிசாக ஒவ்வொரு வருடமும் ரொக்க பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த வருடமும், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும்  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை(ஜன.,9) முதல் ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்புகள் கொடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, இந்த குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஜனவரி 16ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.