தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணமாக ரூ.6000  வழங்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு 6000 ரூபாய் கிடையாது என்று நியாய விலை கடை ஊழியர்கள் கறார் காட்டி விட்டார்கள். இது ஏமாற்றத்தையும் அதிருப்தியும் ஏற்படுத்தியது. இது போன்ற சூழலில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு விஷயத்திலும் வந்துள்ளது. 6000 கிடைக்கவில்லை பொங்கலுக்கு கிடைக்கும் 6 ஆயிரம் ரூபாயும் கிடையாது.

இது என்ன கொடுமை என்பது போல் விமர்சனம் எழுந்துள்ளது. சுமார் 24 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாய் இல்லை என்று கூறப்படுகிறது. இதை சரியாக செயல்படுத்தும் விதமாக தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகளின் பட்டியலை சேகரிக்கும் பணியில் கூட்டுறவுத்துறை ஈடுபட்டுள்ளது. தற்போது பட்டியல் கிடைத்துவிட்டால் யார் யாருக்கு வழங்க வேண்டும் என்பது  குறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.