பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு சொந்த ஊர் வரும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சார்பாக சென்னை, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை, கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து பாபநாசம், தென்காசி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, மார்த்தாண்டம், களியக்காவிளை போன்ற ஊர்களுக்கு ஜனவரி 12,13,14 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக திசையன்விளை, உடன்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பேருந்து நிலையங்களில் இருந்து மதுரை, திருச்சி, திருப்பூர், கோவை, சென்னை போன்ற இடங்களுக்கு ஜனவரி 14 முதல் 22-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் திருச்செந்தூர், நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக இணையதளம் மூலம் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஜனவரி 12 முதல் 14-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல சென்னை தவிர மற்ற ஊர்களில் இருந்தும் ஜனவரி 12 முதல் 14-ஆம் தேதி வரை 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதனால் பொங்கலுக்காக  மொத்தமாக 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கு 4,344 சிறப்பு பேருந்துகளும் பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,965 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதனால் பொங்கலுக்கு பின் 1,599 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பேருந்துகளின் இயக்கம் மற்றும் இயக்கம் குறித்த புகார்களை தெரிவிக்க 94 45014450, 9445014436 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.