பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் கூட்டத்தை குறைக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறு மார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து 18-ம் தேதி மாலை 5:50-க்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவில்பட்டி வழியாக இயக்கப்படும். வெள்ளிக்கிழமை இதற்கான முன்பதிவு பயண சீட்டினை காலை 8 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் தாம்பரத்திலிருந்து ஜனவரி 13-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13-ஆம் தேதி பகல் 2:50 மணிக்கு புறப்படும் சிறப்பு முறையில் கோவை வழியாக அதிகாலை 3.10 மணிக்கு கேரளத்தின் எர்ணாகுளம் சென்றடைகிறது.

ஜனவரி 16-ஆம் தேதி தாம்பரத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து காலை 10:30 மணிக்கு ஜனவரி 18-ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி சென்றடைகிறது. திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு புறப்படும். சிறப்பு ரயில்  மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17-ஆம் தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும். சிறப்பு ரயில் மறுநாள் காலை 6:20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. அதேபோல் திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மேலும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.