தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தைக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பொங்கல் தினமான இன்று (ஜன. 15) முன்வைத்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேரளாவின் ‘யு.டி.எஃப்’ (UDF) மாடலை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ள அவர், கூட்டணியில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமைச்சர் பதவிகளும் முக்கியத் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பகிரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திமுக-வின் ‘ஆன்லைன் வாரியர்ஸ்’ இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், 2016 தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் கலைஞரைக் கைவிட்டபோதும் காங்கிரஸ் மட்டுமே உறுதுணையாக நின்றதைச் சுட்டிக்காட்டி அவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
“நன்றி விசுவாசம் குறித்து எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை; ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம்” என்று அவர் பதிவிட்டுள்ளது, எதிர்வரும் தேர்தலில் திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வில் கடும் இழுபறி ஏற்படும் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும்..
ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல்.
கேரளாவின் UDF மாடல்
கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது.காங்கிரஸ் தலைமையேற்கிறது —
ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.
நட்பு +பங்கு…— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 15, 2026
“>
