
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு திராவிட அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சீமானுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் நேற்று சென்னை அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிட கழக தலைவர் கீ. வீரமணி சீமானின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் , பைத்தியக்காரர்களுக்கு நாங்கள் எப்போதும் பதில் சொல்வதில்லை. வெறி நாய்களுக்கு என்ன விளைவோ அந்த விளைவுகளை தெளிவாக செய்கிறார்கள். மனிதர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் மட்டுமே பதில் சொல்லி பழக்கப்பட்ட நாங்கள் இப்படி கீழ் இறங்க விரும்பவில்லை என்று சீமானை கடுமையாக விமர்சித்து சென்றார்.