
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் பாஜக ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு பொலிரோ கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பைக் மீது மோதிய நிலையில் நிற்காமல் அந்த பைக்கோடு பைக்கில் இருந்தவரையும் சேர்த்து கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது.
இந்த பயங்கர விபத்தில் பைக்கில் இருந்தவரின் இரண்டு கால் எலும்புகளும் முறிந்துள்ளது. இந்த கார் சாலையில் பைக்கை ஓட்டுனர்ருடன் இழுத்து செல்லும்போது தீப்பொறிகள் பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
उत्तर प्रदेश : जिला संभल में BJP स्टिकर लगी बोलेरो ने पहले बाइक सवार युवक को टक्कर मारी, फिर बाइक को 2 KM तक घसीटा। pic.twitter.com/5JNKulsHsA
— Sachin Gupta (@SachinGuptaUP) December 30, 2024