சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக இருசக்கர வாகனங்கள் வாங்குகிறார்கள். புதிய பைக் வாங்க முடியாதவர்கள் பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) பைக்குகளை வாங்குவது வழக்கம். அப்படி வாங்கும்போது, முதலில் அவர்கள் பார்ப்பது பைக் எத்தனை கிலோமீட்டர் ஓடியிருக்கிறது என்பதைத்தான். இந்த கிலோமீட்டர் அளவை வைத்தே பைக்கின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காணொளியில், ஒரு ட்ரில்லிங் மிஷினைப் பயன்படுத்தி பைக்கின் ஒயரை இணைத்து, பைக் ஓடிய கிலோமீட்டர் அளவைக் குறைக்கிறார்கள். இதனால், பைக்கை அதிக விலைக்கு விற்க முடியும் என்பது அவர்களின் தந்திரம். இதுபோன்ற மோசடிகளை அறியாமல், பைக் வாங்குபவர்கள் அடிக்கடி அதை பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு செலவுக்கு ஆளாகின்றனர். எனவே, பயன்படுத்தப்பட்ட பைக் வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காணொளி தற்போது வைரலாகி, இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
