பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக பெண்ணின் தந்தை ஒரு மந்திரவாதியிடம் தன் மகளை அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கு உடம்பில் பேய் புகுந்து இருப்பதாக கூறி அவர் அதனை விரட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பின்னர் மந்திரவாதியிடம் தன் மகளை தனியாக ஒப்படைத்து விட்டு தந்தை வெளியே காத்திருந்த நிலையில் அவர் அந்த கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டார். இது பற்றி வெளியே கூறக்கூடாது என அவர் மிரட்டிய நிலையில் இரண்டாவது முறை அவர் தந்தை அழைத்து சென்றபோதும் மீண்டும் பலாத்காரம் செய்தார்.

பின்னர் மூன்றாவது முறையாக அழைத்து சென்ற போது அந்த மந்திரவாதியின் 2 உதவியாளர்கள் உட்பட மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது பற்றி அந்தப் பெண் பயத்தின் காரணமாக வெளியே சொல்லாமல் இருந்த நிலையில் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகவே குடும்பத்தினர் ஹாஸ்பிடலில் அனுமதிக்க அங்குதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

தற்போது அந்த மந்திரவாதி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.