சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய வீரர் ரிங்கு சிங் செய்த வேடிக்கையான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேட்டிங் செய்யச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரிங்கு சிங், தன்னிடம் பேட் இல்லாததைக் கண்டு பதற்றமடையாமல், அருகில் இருந்த சக வீரர் சஞ்சு சாம்சனின் பேட்டை நைசாக எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

மேலும் கையில் ஒரு துண்டுடன் வந்தவர், யாரிடமும் கேட்காமல் சஞ்சுவின் பேட்டைத் தூக்கிக்கொண்டு மைதானத்திற்குள் சென்ற விதம் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் போது சஞ்சு சாம்சன் கொடுத்த ரியாக்‌ஷன் தான் ஹைலைட். தனது பேட்டை ரிங்கு சிங் எடுத்துச் செல்வதைக் கண்ட சஞ்சு, “டேய், நான் எப்படி பேட்டிங் செய்வேன்?” என்பது போன்ற ஒரு திகைப்பான பார்வையை வீசினார்.

 

View this post on Instagram

 

A post shared by Crickzar | Cricket News, Memes & Updates (@crickzar)

“>

இந்நிலையில் ரிங்கு சிங் எப்போதுமே களத்திலும் சரி, ஓய்வறையிலும் சரி, மிகவும் ஜாலியான மனிதராக இருப்பவர் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சி. தற்போது வைரலாகி வரும் நிலையில், “ரிங்கு சிங் ஒரு நேர்ந்த திருடன் சுவாரசியமாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.