பீகாரில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தில் இன்னும் வேரூன்றியுள்ள மூடநம்பிக்கையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. ‘பில்லி சூனியம்’ வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு, பெற்ற மகன் ஒருவனே தனது வயதான பெற்றோரை கொடூரமாகத் தாக்கி ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்வியறிவு பெருகி வரும் இந்த நவீன காலத்திலும், இதுபோன்ற கண்மூடித்தனமான நம்பிக்கைகளால் சொந்த ரத்தமே பகையாவது பெரும் வேதனையை அளிக்கிறது.

இந்தக் கொடுரச் செயலுக்குப் பின்னால் உள்ள காரணம் இன்னும் விசித்திரமானது. தனது வீட்டிற்குள் நடக்கும் பிரச்சனைகளுக்குத் தனது பெற்றோரே காரணம் என்றும், தனது இளைய மருமகள் தான் வீட்டிற்குள் ‘சூனியக்காரியை’ ஏவிவிட்டதாகவும் அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு குழப்பத்தை மாந்தீரிகத்துடன் தொடர்புபடுத்தி, ஆத்திரத்தில் இந்த வன்முறையை அவர் நிகழ்த்தியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய மகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.