ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மர்மமான நோய் பரவி வருகிறது. இந்த மர்ம நோயினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 30 நாட்களில் அதாவது ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 17 குழந்தைகள் இந்த மர்ம நோயினால் உயிரிழந்துள்ளனர். இது அந்த மாநிலத்திலும் பெற்றோர்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த மர்ம நோயின் அறிகுறிகளாக காய்ச்சல் மற்றும் வாந்தி போன்றவைகள் இருக்கிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட 3 நாட்களுக்குள் உயிரிழந்து விடுகிறார்கள். இதேபோன்று நேற்று இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது. இது தொடர்பாக அந்த மாநில சுகாதாரத்துறை கூறும் போது பருவ கால நோய்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிரமாக சுகாதாரத்துறை ஆராய்ந்து வருவதோடு உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.