தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பல விஷயங்களை பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த பிறகுதான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் ஓடி ஒளிபவன் கிடையாது. அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது.

இருப்பினும் இந்த துயர சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்பவில்லை. அதன் பிறகு கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தாய் மற்றும் தந்தை என இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். மேலும் பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்த குழந்தைகளுக்கு அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படுவதோடு அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும். மேலும் தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடியாக அவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.5 லட்சம் வரவு வைக்கப்படும். இந்த பணம் அவர்களுக்கு 18 வயது நிரம்பியவுடன் வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் கூறினார்.