தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்தது. பெரு நாட்டில் அதிபராக இருந்து வந்த காஸ்டிலோ பதவிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் பெரு நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் நேற்று உச்சத்தை எட்டியது.

ஜூலியாகா எனும் இடத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 17க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். நாடு முழுவதும் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் இதுவரையிலும் 34 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிபர் டினா போல்வார்டே பதவி விலகவேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.