கேரளாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான சேட்டூர் பாலகிருஷ்ணன் (80) இன்று (செப்.18) காலமானார். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் கோழிக்கோட்டிலுள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாஜக முக்கிய நிர்வாகிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மலையம்மா AUP பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கொடுவள்ளி தொகுதியில் போட்டியிட்டார்.