இந்திய சிகை அலங்கார லெஜெண்ட் என்று போற்றப்படும் ஹபிப் அகமது தற்போது மரணமடைந்தார். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவரது தந்தை பிரிட்டிஷ் மற்றும் இந்திய தலைவர்களுக்கு ஹேர் ஸ்டைலிஷ் ஆக இருந்த நிலையில் அதே பணியை இவரும் தொடர்ந்தார்.
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கருப்பு வெள்ளை முடி அலங்காரம், இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சில்வர் ஹேர்ஸ்டைல் போன்றவைகளை இவர்தான் உருவாக்கினார். மேலும் இவரது மறைவுக்கு தற்போது பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
