தலைநகர் தில்லியின் மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 12 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மாணவி பயணம் செய்த ஈ-ரிக்ஷா மீது பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக மற்ற குழந்தைகள் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பிய நிலையில், விபத்தை ஏற்படுத்திய பள்ளிப் பேருந்து ஓட்டுநரை உடனடியாகக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக் குழந்தைகள் பயணிக்கும் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைபாடு குறித்த அச்சத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.