திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தமாள் என்ற மனைவியும் குமரேசன் மற்றும் லோகேஷ் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்ட நிலையில் சேகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சேகர் அந்த நிலத்தில் இருக்கக்கூடிய மரங்களை அகற்றுவதற்காக ஆட்களுடன் சென்றுள்ளார்.

அப்போது மீண்டும் அவருக்கு மாதவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் சேகர் வீட்டுக்குள் திடீரென சுமார் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்துள்ளனர். அவர்கள் சேகர், வசந்தம்மாள் மற்றும் அவருடைய இரு மகன்களை அரிவாளால் சரமாறியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தற்போது அரிவாள் வெட்டில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவாக உள்ள மாதவன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை வலை வீசி தேடி வருகிறார்கள்.