
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நமன் (12) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. மேலும் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது குடும்பப் பிரச்சனையா என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.