தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வூதியதாரர்கள் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றம் செய்வதுள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள் இனி பணத்தை பெறுவதற்கு பென்னி டிராப் சரி பார்க்கும் முறை கட்டாயமாகும். இதன் மூலம் வங்கி சேமிப்பு கணக்கின் உண்மையான மற்றும் செயலில் உள்ள நிலையை கண்காணிக்க முடியும்.

அதாவது வங்கிகள் மூலம் பணத்தை பெறும்போது முதலில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பி சரிபார்க்கப்பட்ட பின்னர் மீதி பணம் அனுப்பப்படும். இந்த விதிமுறை தற்போது பென்ஷன் திட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய மாற்றம் தேசிய பென்ஷன் திட்டம், அடல் பென்ஷன் யோஜனா மற்றும்  NPS லைட் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் இதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் பணம் சரியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.