பாகிஸ்தான் அமெரிக்கர் ஜாகிர் ஜாபன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தன்னுடைய பெண் தோழி நூர் முகமதுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனால் அவர் மறுத்ததால் தன்னுடைய வீட்டில் வைத்து பெண் தோழியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். அதுமட்டுமின்றி தன் பெண் தோழியின் தலையை மட்டும் தனியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து அவர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவரது மரண தண்டனையை உறுதி செய்தது. இதில் கொலை செய்யப்பட்ட நூர் முன்னாள் தூதரின் மகள் ஆவார். இவர் ஜாபரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது அவரின் வீட்டில் வேலை செய்த இருவர் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவர் திட்டமிட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் இவருக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில் அவரது வீட்டு வேலைக்காரர்கள் இருவருக்கும் தலா 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.