அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்த கட்சியின் நாடாளுமன்ற பெண் எம்பி நான்சி மேஸ். இவர் ஹவுஸ் மேற்பார்வை குழுவின் அமர்வின்போது தன்னுடைய நிர்வாண போட்டோவை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அவையில் தன்னுடைய நிர்வாண போட்டோவை காட்டிய அவர் தன்னுடைய வருங்கால கணவர் தனக்கு தெரியாமல் இந்த புகைப்படங்களை எடுத்ததாக குற்றம் சாட்டினார். இந்த நிர்வாண போட்டோ கருப்பு வெள்ளையாக இருந்த நிலையில் இதனை காட்டிய அவர் சுதந்திரம் என்பது ஒரு கோட்பாடு அல்ல. நீங்கள் தூங்கும் போது உங்கள் அனுமதியின்றி உங்களுடைய போட்டோவை எடுக்க முடிந்தால் அதன் பின் சுதந்திரம் கிடையாது.
நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இன்றி ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் இந்த பிரச்சனை குறித்து பேசுகிறேன் என்றார். அவருடைய வருங்கால கணவர் பேட்ரிக் பிரையன்ட் தன்னை ரகசியமாக நிர்வாண போட்டோ எடுத்தது மட்டுமின்றி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த வீடியோஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
