
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கலால் மற்றும் மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியர் சித்தராஜ். இவர் ஏற்கனவே கூடலூர் வட்டாட்சியராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை கோழிக்கண்டி பகுதியில் நாட்டு கோழி மற்றும் முட்டைகள் வாங்க செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோல நேற்று நாட்டுக்கோழி வாங்க சென்ற சித்தராஜ் அப்பகுதியில் வசித்து வரும் கணவனை இழந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் வட்டாட்சியர் மீதான குற்றச்சாட்டு உண்மையானதால் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.