
நாக்பூரில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் பங்கிற்கு வந்த ஒரு நபர் தெரு நாயை துன்புறுத்தியுள்ளார். அதனை ஒரு பெண் தட்டி கேட்டார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நபர் தனது நண்பர்களை வரவழைத்தார்.
பின்னர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து அவரை ஆண்களின் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இந்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.