பொதுவாக பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் தலைமுடியை மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் வெட்டிக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் தற்போது வித்தியாசமாக முடி வெட்டுகிறார்களோ இல்லையோ அதை வேறு விதமாக வடிவமைத்து விடுகின்றனர். அதன்படி தற்போது ஒரு புதிய வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில் தலைமுடியை டீபாட் ஆக மாற்றியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த டீபாட் ஹேர் ஸ்டைலில் அவர் தண்ணீரை ஊற்ற அது ஸ்பவுட் வழியாக வெளியே செல்கின்றது. இதனால் அந்த வீடியோ 3.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதே சமயம் இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் தலைமுடியால் வடிவமைக்கப்பட்ட “டீபாட்”டிலிருந்து தேநீரை ஊற்றி அனைவரையும் வியக்க வைக்கின்றார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.