தமிழக அரசானது பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவரிசையில் பெண்களுடைய பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்காக பதிவு கட்டணம் ஆனது ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  10 லட்சம் வரை வீடு, மனை, விலை நிலம் போன்ற அசையா சொத்துக்கள் பெண்களுடைய பெயரில் வாங்கினால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும்.

தற்போது மேற்கொள்ளப்படும் பத்திர பதிவுகளில் 75 சதவீதம் பதிவுகள் இந்த அறிவிப்பால் பயன் பெற முடியும். தற்போது இந்த சலுகை யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது என்பன குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ளது.  அதன்படி சொத்தை வாங்குபவர் பெண்ணாக இருந்தலோ  அல்லது பெண்கள் கூட்டாக வாங்கப்படும் நிலங்களுக்கு மட்டுமே இந்த கட்டண சலுகை பொருந்தும் .

மேலும் ஒரு சொத்தை குடும்ப நபர்கள் மட்டும் இணைந்து வாங்கி அந்த பெண் பெயரில் இருந்தால் இந்த கட்டண சலுகை பொருந்தும். ஆனால் ஒரு சொத்து கூட்டாக கணவன் மனைவி பெயரில் இருந்தால் இந்த சலுகை பொருந்தாது. இந்த சலுகை பெறுவதற்காகவே ஒரு சொத்தை பல பகுதிகளாக பிரிக்க கூடாது என்றும், இதுவரை பதிவான ஆவணங்களுக்கு செலுத்தப்பட்ட கட்டணங்கள் திரும்ப பெற முடியாது என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது .