
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி சடையம்மான்குளத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா(57). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் காட்டன் மில் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல வேலைக்கு சென்ற ஜோஸ்வா கம்பெனியில் பணி புரியும் பெண்களை அழைத்து வருவதற்காக நான்கு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
செங்குளம் விளக்கு அருகே சென்றபோது அங்கு அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கார்த்திக்(29) என்பவர் ஜோஸ்வாவே வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்பு ஜோஸ்வாவிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஜோஸ்வா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் நேற்று போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். பின்பு அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.