சென்னையில் கடந்த 4 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3000 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே நீடிக்கிறது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9320 ரூபாய்க்கும், ஒரு சவரன் 74 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் 10167 ரூபாய்க்கும், ஒரு சவரன் 81336 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையிலும் ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.