பெண்கள் தொழில் தொடங்க ‘உத்யோகினி’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 18-55 வயதுக்குட்பட்ட மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு குறைவாக பெறும் பெண்களுக்கு ரூ.3,00,000 கடன் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற விரும்புவோர். ரேஷன், ஆதார், வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ்கள், வங்கி பாஸ் புக் மற்றும் புகைப்படங்களுடன் அருகில் உள்ள வங்கிகளை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும், உத்யோகினி என்பது கிராமப்புற மற்றும் முன்னேற்றம் அடையாத பகுதிகளில் இருந்து பெண் தொழில்முனைவோருக்கு மானிய கடன்களை வழங்கும் ஒரு திட்டமாகும். பெண்களுடைய நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் இதுவும் ஒரு திட்டமாகும்.