மத்திய அரசாங்கம் பொதுமக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. சிறு தொழில் தொடங்குவதற்கு 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிறு தொழில் தொடங்குவதற்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்.

பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கடன் வழங்குகின்றன. இந்த திட்டத்தில் மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.