
இந்தியாவில் ஏழை பெண்களின் பொருளாதார தன்னம்பிக்கைக்காகவும் அவர்களை தொழில் முனைவோராக வளர்ப்பதற்கும் மஷிளா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. சுய உதவிக் குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன.
ஒரு பெண் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை ஒரு லட்சம் ரூபாய். ஒவ்வொரு சுய உதவிக் குழுவும் அதிகபட்சம் பெரும் தொகை 15 லட்சம். இந்த கடனை நான்கு ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்களுக்கு அருகில் உள்ள வங்கிகள் அல்லது NBCFDC என்ற இணையதளத்தை அணுகவும்.