மத்திய மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி  தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். அதேபோல பல மாநிலங்களிலும் பெண்களுக்கு ரேஷன் மூலமாக  உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகான்  திருமணமாகாத பெண்களுக்கு மாதம் 1250 ரூபாய் வழங்கும் திட்டத்தை  அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு லட்லி பெஹனா யோஜனா பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒவ்வொரு கட்டமாக மாதம் 3000 வரையில் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.