தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் திமுக அரசால் வழங்கப்படுகிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி குலவிளக்கு திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் அனைத்து ரேஷன் ஆட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் எனவும் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இது நகர பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தார்.
இதற்கு முன்னதாகவே திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படும் என்று கூறியுள்ளது. அதன்படி வருகிற சட்டப்பேரவை தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தெரிந்து கொண்டு தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை குறித்த தேர்தல் வாக்குறுதியை கொடுத்ததாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. மேலும் இதுகுறித்த அறிவிப்புகள் வருகிற நாட்களில் வெளிவரும் என்பதால் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
