
தமிழக அரசு பெண்களுக்கான பொற்கால திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகின்றது. அதுவும் ஆண்டுக்கு ஒன்றுக்கு வெறும் ஐந்து சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் கடன் தொகையை திருப்பி செலுத்த மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை அவகாசமும் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விருப்பம் உள்ள பெண்கள் அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.