தமிழக பாஜக அண்ணாமலை நடைப்பயணத்தை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின், பாஜக நடத்துவது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை என்று பேசினார்.

இந்த நிலையில் பாஜக யாத்திரை ஒரு பாவ யாத்திரை என முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக MLA வானதி, டாஸ்மாக் மூலம் பெண்களின் தாலியை பறிக்கின்ற பாவக் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் மூழ்குவார் என  முதல்வர் ஸ்டாலினுக்கு சாபம் விடுத்துள்ளார். திமுக அரசு ஒவ்வொரு நாளும் தமிழகத்திற்கு செய்து வரும் பாவத்தை பார்த்து கொண்டே தானிருக்கிறோம். குடியால் அழியும் குடும்பங்களின் வலியும்,வேதனையும் இந்த அரசை சும்மாவிடாது என்றார்.