பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது என்று மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. பெண்களின் வயது வாரியாக பல பெண்களின் செல்போன் எண்கள் உள்ளதாகவும் கூகுள் பே மூலமாக பணம் செலுத்தினால் செல்போன் எண்கள் அனுப்பப்படும் என்று கூறி பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை நம்பி செல்போன் நம்பரை வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியாக பாலியல் தொழில் செய்பவர்களின் எண்கள் விற்று விடப்படுகிறது . 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செல்போன் எண்கள் விற்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது எனவே இது போன்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அரசு எச்சரித்துள்ளது.