கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 5,102 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது

இந்நிலையில் வரும் புதன்கிழமை தேர்தல்  நடைபெறவுள்ளதை ஒட்டி பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை செய்தித் தாளில் காங்கிரஸ் கட்சியினர் வித்தியாசமான பிரச்சார உத்தியினை கையில் எடுத்தனர். காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் தற்போதைய பாஜக ஆட்சியில் விலையையும் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் பெரும்பாலான விலை 80% உயர்ந்துள்ளது.